எதிர்காலத்தில் 3 வங்கிகள் மட்டும்தான் – மத்திய அரசின் அடுத்த அடி

  0
  3
  Banks

  எதிர்காலத்தில் 3 வகையான வங்கிகளே செயல்பாட்டில் இருக்கும் என நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

  27 பொதுத்துறை வங்கிகளை 12 ஆக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது. இதேபோல, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படும். இந்தியன் வங்கி,  அலகாபாத் வங்கியுடன் இணையும். இந்த இணைப்பின் மூலம் 12 பொதுத்துறை வங்கிகளாக குறைக்கப்படும். ஆனால் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். இருப்பினும் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி நேற்று வங்கி தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டானர். 

  Nirmala

  இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மூலம் வேலையிழப்பு ஏற்படாது என்றும், வேலைவாய்ப்புதான் அதிகரிக்கும்.  சிறிய வங்கிகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு பணிமாறுதல் வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்காலத்தில் வலிமையான தேசிய இருப்புடன் சர்வதேச அளவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள், தேசிய இருப்புடன் கூடிய பொத்துறை வங்கிகள், மாநில இருப்புடன் கூடிய பொத்துறை வங்கிகள் ஆகிய மூன்று வங்கிகளே இருக்கும். முதலீட்டத்தை அதிகரித்து செலவீனத்தை குறைக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது” என்று கூறினார்.