எதிர்கட்சியினருக்கு இன்று இரவு தூக்கம் வராது: மோடி பெருமிதம்

  0
  2
  மோடி

  நம் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன. செயற்கைகோளை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். காங்கிரஸ் பதவிக்கு வந்தால், கும்பகர்ணன் போல தூங்கதான் செய்வார்கள் என்றார்.

  மக்களவை தேர்தலையொட்டி பிரசார வேலைகளில் பிஸியாக இருக்கிறார் பிரதமர் மோடி. வெவ்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வரும் மோடி, இன்று மகாராஷ்டிரா, ஆந்திரா  மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள முக்கியமான இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

  modi

  மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னெடுத்துள்ள பிரதமர் மோடி, திங்கள் கிழமை அன்று மகாராஷ்டிராவில் வார்தா, ஆந்திராவில் ராஜமுந்திரி, தெலங்கானாவில் ஐதராபாத் ஆகிய ஊர்களில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவர், நம் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன. செயற்கைகோளை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். காங்கிரஸ் பதவிக்கு வந்தால், கும்பகர்ணன் போல தூங்கதான் செய்வார்கள் என்றார்.

  மேலும் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தொடர்ந்து பேசிய மோடி, கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் கூடியுள்ளதை கண்டால் எதிர்க்கட்சியினருக்கு இன்று இரவு தூக்கம் வராது என தெரிவித்தார்.

  இதையும் வாசிங்க

  பக்கா அரசியல்வாதியான கமல்ஹாசன்; கொதிக்கும் எழுத்தாளர்!