எதிரியையும் நேசிக்க கற்றுக்கொள்…. உதாரணமாக ஜொலிக்கும் பிரியங்கா!!

  0
  4
  Priyanka

  பிரியங்கா பரப்புரை செல்லும் வழியில் மோடி வாழ்க என்று கோஷம் எழுப்பியவர்களைக் கண்டதும் கார் கான்வாயை நிறுத்தி அவர்களுக்கு வாழ்த்து  சொல்லிட்டு போய்கிட்டே இருந்தார்.இதனை பார்த்த பாஜக ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து வாயடைத்து நின்றனர்.

  பிரியங்கா பரப்புரை செல்லும் வழியில் மோடி வாழ்க என்று கோஷம் எழுப்பியவர்களைக் கண்டதும் கார் கான்வாயை நிறுத்தி அவர்களுக்கு வாழ்த்து  சொல்லிட்டு போய்கிட்டே இருந்தார் இதனை பார்த்த பாஜக ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து வாயடைத்து நின்றனர்.

  इंदौर में कुछ लोगों ने प्रायोजित तरीक़े से मोदी-मोदी के नारे लगाए तो प्रियंका गांधी ने कार से उतर कर नारे लगाने वालों से हाथ मिलाया और कहा “आप अपनी जगह, मैं मेरी जगह ‘आल दी बेस्ट”।

  इसे कहते हैं देश की मिट्टी, देश की जनता और देश के कण-कण से प्यार।

  काश…मोदी भी देश को समझ पाते। pic.twitter.com/dEYL7CdaKI

  — MP Congress (@INCMP) May 13, 2019

  தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய பிரதேசத்துக்கு முதல் முறையாக பிரியங்கா காந்தி சென்றிருக்கிறார். இந்தூர் அருகே ராஜ் மோஹல்லாவிலிருந்து சாலை வழியாக பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி. இதையடுத்து வழிநெடுகிலும் உள்ள மக்களைப்  பார்த்து கையசைத்தவாறு சென்றார். அவருடன் மற்றொரு கார்களில் ம.பி. முதல்வர் கமல்நாத்தும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் உடனிருந்தனர்.

  அப்போது காந்தி விமான நிலையம் அருகே சிலர் பிரியங்காவை வெறுப்பேத்துவதற்காக அவர் அருகில் வந்து “மோடி வாழ்க ” என கோஷம் எழுப்பினர்.இதைப்  பார்த்தவுடன் தன் வாகனத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, கீழிறங்கி பாஜக நிர்வாகிகளிடம் கை குலுக்கி வாழ்த்துகள் என சொல்லிவிட்டு,நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள்…. நான் என் வழியில் பயணிக்கிறேன் என கூறிவிட்டு சிரித்தப்படி அங்கிருந்து நகர்ந்தார்.