எடப்பாடி பேச்சுக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ சொன்ன ரஜினிகாந்த்

  0
  3
  ரஜினி- பழனிசாமி

  ரஜினியின் பேச்சுக்கு சில கட்சியினர் ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்த ரஜினி தனது வீட்டிற்குத் திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது’ என்று பேட்டி கொடுத்தார். ரஜினியின் பேச்சுக்கு சில கட்சியினர் ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

  rajini

   இது குறித்து விக்கிரவாண்டியில் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை’ என்று கூறினார். 

  rajini

  இந்நிலையில் ரஜினிகாந்த்தை  நேற்று விமான நிலையத்தில் சந்தித்த பத்திரிகையாளர்கள் முதல்வரின் பேச்சுக்கு ரியாக்ஷன் கேட்க, அதற்கு ரஜினியோ  சுதாரித்துக் கொண்டு, நோ கமெண்ட்ஸ் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.