எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அப்பா மாதிரி… சரணடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர் 

  0
  5
  SA Chandrasekar

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளன. இரு படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார்.

  SAC

  மேலும், சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பு கொடுக்க வேண்டும் என திரையரங்குகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  bigil

  இந்நிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,  “குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் குடும்பத்தலைவரிடம் தான் கூற வேண்டும். அதுபோல தமிழகத்தின் தந்தையும் தாயுமான எடப்பாடி பழனிச்சாமியாரிடம் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சொல்ல வேண்டும். எங்களுக்கு அவர் எதிரி அல்ல… தாய், தந்தை எல்லாமே அவர்தான்.” என்று கூறியுள்ளார்.