எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தி.மு.க எம்.பி! – மகிழ்ச்சியில் அ.தி.மு.க

  0
  3
   எம்.பி பாரிவேந்தர்

  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக உரிமையாளர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து.

  பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க எம்.பி பாரிவேந்தர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வந்து சந்தித்தது அ.தி.மு.க-வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக உரிமையாளர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து. தனிக் கட்சி நடத்தினாலும் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டவர் என்பதால் இவர் தி.மு.க உறுப்பினர் என்றே கருதப்படுவார்.

  edappadi

   

  இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென்று கோட்டையில் பாரிவேந்தர் சந்தித்துப் பேசினார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேசியதாகவும் அரசியல் பேசியதாகவும் கூறப்படுகிறது.
  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரிவேந்தரின் கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று செய்திகள் வெளியான சூழலில் எடப்பாடி பழனிசாமியை பாரிவேந்தர் சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க எம்.பி ஒருவர் எடப்பாடி பக்கம் வருவது அ.தி.மு.க தொண்டர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.