எடப்பாடி அரசின் மெகா அறிவிப்பு! களை கட்டும் உள்ளாட்சி தேர்தல்!

  0
  2
  எடப்பாடி பழனிசாமி

  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் பகல் 12.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் பகல் 12.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருப்பதால், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடப்பாடி அரசி சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  edapadi

  தேர்தல் தேதி அறிவித்த பின்னர் புதிய திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது என்பதால், மக்களைக் கவரும் நோக்கில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சில திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு நாளை அதிகாலை துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். 

  modi and edapadi

  பாஜக மீதான அதிருப்தியில் மக்கள் இருப்பதாக சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பரப்புரைச் செய்யப்பட்டாலும், சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றது முதல்வருக்கு புது தெம்பை அளித்திருக்கிறது என்கிறார்கள். மக்கள் இன்னும் அதிமுக வை கைவிடவில்லை என்பதை நிரூபிப்பதற்கு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிப் பெற வேண்டும் என்று எடப்பாடி, கட்சியினரிடையே திட்டங்களைத் தீட்டச் சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.