எடப்பாடி அரசின் மற்றுமொரு சாதனை! இன்னும் 2 வருஷம் இருந்தா அம்புட்டுத்தான்!

  0
  1
  TN Downgraded

  ஓ.பி.எஸ்ஸுக்கு செக் வைக்கணும், தினகரன்மேல் கண்ணு வைக்கணும், எம்.எல்.ஏக்களை ஸ்டாலின் தள்ளிகிட்டுப் போகாம கண்காணிக்கனும், அமித் ஷாவுக்கு வணக்கம் வைக்கணும் என பலதரப்பட்ட பணிச்சுமைக்கு மத்தியில் மக்கள் நலப் பணியில் சற்றே சுணக்கம் ஏற்படுவது இயற்கைதானே?

  சுகாதாரத்தில், மருத்துவ வசதிகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் வரிசைப்பட்டியலை கடந்த ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்டு இருந்தது. கேரளா முதலாவது இடத்திலும், பஞ்சாப் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தன.  இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, 23 காரணிகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.அம்மாவின் பொற்கால ஆட்சி தொடரும் இந்த அருமையான தருணத்தில், 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலை நிதி ஆயோக் திரும்பவும் வெளியிட்டு இருக்கிறது.

  NITI Aayog

  முந்தின வருஷம் மூணாவது இடம்னா, இந்த வருஷம் டாப் கியர் போட்டு முதலிடத்தை தூக்கி சாப்பிட்டிருக்கணுமே, அதானே லாஜிக். அங்கதான் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி சற்று சறுக்கிவிட்டது. கடந்த வருடம் மூணாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்த வருடம் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு செக் வைக்கணும், தினகரன்மேல் கண்ணு வைக்கணும், எம்.எல்.ஏக்களை ஸ்டாலின் தள்ளிகிட்டுப் போகாம கண்காணிக்கனும், அமித் ஷாவுக்கு வணக்கம் வைக்கணும் என பலதரப்பட்ட பணிச்சுமைக்கு மத்தியில் மக்கள் நலப் பணியில் சற்றே சுணக்கம் ஏற்படுவது இயற்கைதானே?  அடுத்த முறை எடப்பாடியாரின் ஒற்றைத் தலைமையில் ஆட்சியை தந்துப்பாருங்கள், என்ன நடக்கிறது என்று!