எடப்பாடிக்கு கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது! – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

  0
  21
  Udhayanidhi Stalin

  சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை வழங்கி பேசினார்.

  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றி என்பது இடைவேளைதான்,கிளைமாக்ஸ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்தான் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
  சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை வழங்கி பேசினார்.
  அப்போது அவர் கூறியதாவது, “ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையை இன்று எதிர்க்கட்சியான திமுக செய்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்து தரவேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது.ஆனால்,இந்த அடிமை அரசிடமிருந்து எந்த நலத்திடங்களையும் எதிர்பார்க்க முடியாது. 

  Udhayanidhi Stalin

  வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்குப் பதில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுகிறது இந்த அரசு.அமைச்சர் முதல் அனைவருக்கும் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்ததற்குத் தொடர்பு இருக்கிறது.இவர்கள் ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வர மாட்டார்கள்.ஏனென்றால் இவர்களை மேலிருந்து ஆட்டிவைப்பது மோடி.
  சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தனர் மக்கள்.அது ஒரு சினிமாவின் இடைவேளைதான்.அடுத்து 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்தான்,சினிமாவின் கிளைமாக்ஸ்.அதில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டப் போவது திமுகதான்.தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார்.எடப்பாடி ஆட்சிக்கு இன்னும் 12 மாதங்கள்தான் இருக்கின்றது” என்றார்.