எங்க மாமி தயாரிச்சது! பட்ஜெட் ரகசியத்தை உடைத்த நிர்மலா சீதாராமன்!

  0
  1
  துணி பை

  மத்திய பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்த துணிப் பை எங்க மாமி (அத்தை) தயாரிச்சு தந்தது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

  வரும் நிதியாண்டில் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான விரிவான அறிக்கையே நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை. 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நிதியமைச்சர் ஒருவர் பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் கொண்டு வந்த தாக்கல் தாக்கல் செய்தார். அதுமுதல் அந்த நடைமுறை பழக்கத்தில் இருந்து வந்தது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை வெளியேறி விட்டாலும், அவர்களின் சூட்கேஸ் நடைமுறையை முந்தைய நிதி அமைச்சர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

  நிதி அமைச்சர்கள்

  ஆனால் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூட்கேஸ் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். பட்ஜெட் ஆவணங்களை சிகப்பு கலர் துணி பையில் வைத்து கொண்டு வந்தார். இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், நான் இங்கிலாந்தில் பணியாற்றிய போது என்னால் மறக்க முடியாத நிகழ்வுதான் என்னை சூட்கேஸை தவிர்க்க செய்தது.

  நான் இங்கிலாந்தில் இருந்தபோது வேந்தர் ஒருவர் எப்போதும் ஒரு கையில் பேக் வைத்து வருவார். அந்த பேக்கில் இரண்டாம் எலிசபெத் அரசி என்ற எம்பலம் இருக்கும். அது என் நினைவில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த நினைவின் நீட்சியாகதான் சூட்கேஸ் வேண்டாம் என்று முடிவு செய்தேன். நாம் நம்முடைய எண்ணங்களுக்கு மாற இதுதான் சரியான நேரம்.

  சூட்கேஸ்

  என் முடிவை எனது குடும்பம் எளிமையாக்கி விட்டது. என் மாமிதான் (அத்தை) அந்த சிகப்பு கலர் துணிப்பையை தயாரித்தார். அந்த பையில் அரசின் சின்னத்தை நான் வைத்தேன். மும்பையில் உள்ள சித்தி விநாயக் மற்றும் மகாலெட்சுமி கோயில்களுக்கு சென்று  அந்த பைக்கு பூஜை செய்த பிறகு அந்த பையை மாமி என்னிடம் தந்தார் என கூறினார்.