“எங்க அண்னன் ஆவியா வந்து என்னை தாக்கினார் “-இறந்த நபரின் மரண வாக்குமூலம்.. 

  0
  5
  representative image

  தானே மாவட்டத்தில் பிவாண்டியில்  துளசிராம் சவான் என்ற 31 வயது  நபர் அவரது பெற்றோர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். பிவாண்டியில் அவரோடு  தங்க வந்த அவரின் சகோதரர்  இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இறந்தார்.

  தானே மாவட்டத்தின் பிவாண்டி டவுன்ஷிப்பில் உள்ள நார்போலி பகுதியில் சனிக்கிழமை 31 வயது நபர் கழுத்தை  அறுத்து இறந்து கிடந்தார் .
  தானே மாவட்டத்தில் பிவாண்டியில்  துளசிராம் சவான் என்ற 31 வயது  நபர் அவரது பெற்றோர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். பிவாண்டியில் அவரோடு  தங்க வந்த அவரின் சகோதரர்  இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இறந்தார்.

  துளசிராம் வெள்ளிக்கிழமை இரவு   இறந்த தன்னுடைய சகோதரர் வீட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் , தான்  தூங்கும்போது அவர் தன்னை   தாக்கியதாகவும்  பக்கத்து வீட்டு பெண்ணிடம் அவர் கூறியுள்ளார் 
  அதனால் அந்தப் பெண் அவனை தனது வீட்டில் தூங்கச் சொன்னார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த துளசி ராம் தன்னுடைய வீட்டிலேயே தூங்கியுள்ளார். ஆனால் இன்று காலை வரை அவர் வெளியே வராததால் பக்கத்துவீட்டினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார், இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .