எங்களது உயிர் எங்களுக்கு முக்கியமல்ல. மக்கள் உயிரை காப்பதே எங்கள் நோக்கம். – அமைச்சர் செல்லூர் ராஜூ

  0
  4
  sellur raju

  மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரமம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

  மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரமம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் 3ஆயிரம் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகங்களில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. அசைவ பிரியர்களுக்காக முட்டை வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முட்டைகள் இலவசமாக அவித்து வேண்டுவோருக்கு கொடுக்கப்படுகிறது. மதுரையில் 1 லட்சத்து 44ஆயிரத்து 540 பேர் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருகின்றனர். சிலருக்கு இலவச உணவும் வழங்கப்படுகிறது.முட்டை வேண்டுவோருக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது.

  sellur raju

  அத்தியாவசிய பொருட்கள் மதுரையில்  தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. அதிகாரிகள் அதனை உறுதி செய்து வருகின்றனர்.மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகளுக்கு பொருட்கள் கொடுக்கப்படுகிறது. வியாபாரிகள் செயற்கை விலையேற்றம் செய்ய முற்பட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் உணவு பொருள் வியாபாரிகள் நியாயமாக தர்மமாக நடந்துகொள்வார்கள். 

  மதுரையில் பெரும்பாலான ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. மேலும் தங்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க வழி செய்யப்பட்டு வருகிறது.  நியாய விலைக்கடைகளில் பணம் வாங்க தான் அடிதடியாக இருந்தது. 95.39 சதவீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. பொருட்களும் அனைவருக்கும் கிடைக்கும்.எங்களது உயிர் எங்களுக்கு முக்கியமல்ல. மக்கள் உயிரை காப்பதே எங்கள் நோக்கம்” எனக்கூறினார்.