ஊழலில் தி.மு.க – அ.தி.மு.க-வுக்கு வேறுபாடு இல்லை! – குருமூர்த்தி சொல்கிறார்

  0
  2
  குருமூர்த்தி

  ஊழலில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு வித்தியாசம் இல்லை என்றும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மூடப்பட வேண்டும் என்று துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

  துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா சென்னையில் நடந்து. இந்த விழாவின்போது பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:

  “குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளன. இது ஆபத்தானது. குடியுரிமை சட்டத்தினால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்பதால்தான் தி.மு.க, சிவசேனா போன்ற கட்சிகள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. விரைவில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள்.

  பாபர் மசூதி விவகாரத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு இடையே பிரச்னை இல்லை. இடதுசாரி அமைப்புகள்தான் ராமர் பிறந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்கள் எனக்கூறி பிரச்னையை உண்டாக்கின.

  ஜே.என்.யு-வின் டி.என்.ஏ நாட்டிற்கு எதிரானது. அது திருத்தப்பட வேண்டிய ஒன்று. இல்லை என்றால் மூடப்பட வேண்டிய ஒன்று. சோ எதையும் வெளிப்படையாக செய்வார். நான் எதையும் வெளிப்படையாக செய்ய மாட்டேன். அதனால், அது பற்றி இங்கு சொல்ல மாட்டேன்.

  இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்தில் நாட்டின் பொருளாதார நிலை மாறும். தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துவிட்டது. காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் கூட்ட முடியவில்லை. லஞ்சத்தில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. நாத்திக அரசியலுக்கு எதிரான இந்து அரசியலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தவர் எம்.ஜி.ஆர். தனக்கு முன் இருக்கும் பொறுப்பு என்ன என்பது நடிகர் ரஜினிக்கு தெரியும்” என்று பேசினார்.

  துக்ளக் விழாவில் ரஜினி மற்றும் குருமூர்த்தியின் பேச்சு சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி வருகிறது. குருமூர்த்தியின் உளறல்கள் பட்டியலை பலரும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.