ஊரை விட்டே ஓடப்போறீங்க… நேருக்கு நேர் மோதலாம் வர்றீயா..? உதயநிதிக்கு சவால் விடும் மாரிதாஸ்..!

  0
  1
  உதயநிதி

  அன்று திமுக அழியும் அத்தோடு உங்கள் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். அது உங்கள் காலத்திலேயே பார்ப்பீர்.

  நில அபகரிப்பு பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் அல்ல திமுக கட்சி பேச குறைந்த பட்ச தகுதி கூட கிடையாது என்பது என் கருத்து என சமூக செயர்பாட்டாளர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’ஸ்டாலின் அவர்களுக்கும் , உதய நிதி அவர்களுக்கு இன்று இல்லை நாளை என் வீடியோ வெளியிடுகிறேன் முடிந்தால் திராணி இருந்தால் பதில் சொல்லலாம்.

  stalin

  உதய நிதி அவர்கள் தமிழகத்திற்கு மோடி துரோகம் செய்துள்ளார் என்று பேசியுள்ளார். நான் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குச் சொல்ல வேண்டியது இதுவே “நான் திமுக கட்சியும் , உங்கள் குடும்பமும் இந்த தமிழகத்திற்குச் செய்த துரோகங்களைப் பட்டியலிடத் தயார் ஆதாரங்களுடன் வருகிறேன் நீங்கள் மோடி என்ன என்ன துரோகம் செய்தார் என்று ஆதாரங்களுடன் வாருங்கள் ஒரு மேடையில் விவாதம் செய்து கொள்ளலாம். நேரம் , தேதி , இடம் குறிக்கத் தயாரா?

  இந்த உலகத்திலேயே கொள்ளை அடிப்பதற்காகவே வாழும் இயக்கம் உங்கள் திமுக இயக்கமும் அதில் உள்ள நிர்வாகிகளும் தான். உங்கள் தாத்தா அந்த கூட்டத்தின் தலைவன். கொள்ளை அடிப்போம் அடித்த கொள்ளையைப் பங்கு பிரிப்போம் என்று வாழும் நீங்கள் இந்த தேசத்து மக்களே எனக்குச் சொத்து வேறு எந்த சொத்தும் தேவை இல்லை என்று வாழும் நரேந்திர மோடி பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது.

  maridhas

  ரெம்ப சிம்பிள் உங்கள் தாத்தா திருட்டுத் தனமாக ரயில் ஏறி சென்னை வரும் முன் உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் சொத்து என்ன? எப்போது எப்படி ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறீர் எப்படி????

  அமெரிக்காவை ஆண்ட பரம்பரை கூட எவ்வளவு சொத்து இல்லை ஆனால் தமிழகத்தை ஆண்ட உங்கள் குடும்பம் எப்படி பல ஆயிரம் கோடிகள் சேர்த்தீர்? 13 ஆண்டுகள் முதல்வர் , 6 ஆண்டுகள் பிரதமர் என்று வாழும் நரேந்திர மோடி குடும்பத்துச் சொத்து என்ன தெரியுமா?? வெளியிடவா???பேசலாமா உதயநிதி???? இந்த தமிழகம் ஒரு நாள் விழித்துக் கொள்ளும் அன்று திமுக அழியும் அத்தோடு உங்கள் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். அது உங்கள் காலத்திலேயே பார்ப்பீர்.maridhas

  இவ்வளவு திமிர் பேச்சு ஏன் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து வருகிறது என்றால் அந்த அளவிற்கு “ரவுடிகள் நம் பக்கம் , பணம் நம்மிடம் இருக்கிறது” என்ற ஆணவம் தான் உங்கள் பேச்சின் வெளிப்பாடு. அந்த ஆணவத்தால் அழிவது உறுதி. அடுத்த வீடியோ உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் சமர்ப்பணம்’’ எனத் தெரிவித்துள்ளார்.