ஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்!

  0
  14
  சந்தை மட்டன் சாப்பாடு

  பெயரே புதுசா இருக்கில்ல,காரணம் இருக்கு.திருநெல்வேலியில் இருந்து குற்றாலம் போகும் சாலையில் இருக்கிறது. இந்த மட்டன் சாப்பாடு ஹோட்டல்.
  இந்த ஹோட்டலுக்கு ஐம்பது வயதாகிறது.ஒரு காலத்தில் இது நடமாடும் உணவகமாக இருந்திருக்கிறது.

  பெயரே புதுசா இருக்கில்ல,காரணம் இருக்கு.திருநெல்வேலியில் இருந்து குற்றாலம் போகும் சாலையில் இருக்கிறது. இந்த மட்டன் சாப்பாடு ஹோட்டல்.
  இந்த ஹோட்டலுக்கு ஐம்பது வயதாகிறது.ஒரு காலத்தில் இது நடமாடும் உணவகமாக இருந்திருக்கிறது.

  hotel

  இந்தப் பகுதியில் வாரச்சந்தைகள் அதிகம்.ஞாயிற்றுக்கிழமை விக்கிரம சிங்கபுரம்,சனிக்கிழமை அம்பாசமுத்திரம்,வியாழக்கிழமை பாவூர் சத்திரம்,புதன்கிழமை தென்காசி என்று வாரம் முழுவதும் ஊர் ஊருக்கு கூடும் சந்தைக்குப் போய் ஒரு தாற்காலிக பனையோலைப் பந்தல் அமைத்து, சந்தைக்கு வருவோருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறார் லிங்கத்துரை.

  food

  காலப்போக்கில் பாவூர் சத்திரத்தில் நிலையாக உணவகம் அமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் கூரைக்கடை என்று அழைக்கபட்ட இந்த உணவகத்திற்கு சந்தை மட்டன் சாப்பாட்டுக் கடை என்று பொருத்தமாகப் பெயர் வைத்து இருக்கிறார்,லிங்கத்துரையின் மகன் மனோஜ்.

  food

  மட்டன் சாப்பாடு நூறு ரூபாய்,இலையைப் போட்டதும் முதலில் எலுமிச்சை ஊறுகாய் வைக்கிறார்கள். அடுத்து குடலும் ரத்தமும் சேர்த்து செய்த பொரியல், அப்புறம் வடித்த சூடான சோறு,எலும்பும் கறியும் சேர்த்தே செய்த ஒரு குழம்பு,ரசம்,தயிர் அவளவுதான் சாப்பாடு.

  food

  கிராமப்புரத்தில் நடக்கும் கோவில் விழாக்களில் கிடாய் வெட்டும்போது செய்யப்படும் அதே சுவையுடன் இருக்கிறது மட்டன் குழம்பு.அருகில் இருக்கும் அடைக்கலம்பட்டி என்கிற கிராமம் ஆடு வளற்புக்கு பிரசித்தமாம். அங்கிருந்துதான் ஆடுகள் வாங்கப்படுகின்றன.

  food

  அஜினோ மோட்டோ மட்டுமல்ல,பட்டை , லவங்கம் கூடக்கிடையாது.
  வீட்டிலேயே அரைக்கப்பட்ட மசாலாதான்.காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே இந்த ஹோட்டல் இயங்குகிறது.பெரும்பாலான வாடிக்கையாளர்கள்,விவசாயத் தொழிலாளர்கள் என்பதால் , அவர்களுக்காக வெள்ளி  செவ்வாய் கிழமைகளில் மட்டனுக்குப் பதில் சிக்கன் சாப்பாடு தருகிறார்கள்.