‘ ஊரே சோத்துக்கு  செத்திட்டிருக்கும்போது குக் பண்ணி கூத்தடிக்காதிங்க ‘ நெட்டிசன்களை திட்டிய சானியா மிர்சா

  0
  90
  sania-mirza

  கொரானா பரவலை தடுக்க  ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இப்படி ஒரு  மோசமான சூழ்நிலையை  பார்த்ததில்லை. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கும்போது, ​​எல்லோரும் அவரவர் வசதிக்கேற்றவாறு  நிலைமையைக் கையாளுகிறார்கள்

  கொரானா பரவலை தடுக்க  ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இப்படி ஒரு  மோசமான சூழ்நிலையை  பார்த்ததில்லை. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கும்போது, ​​எல்லோரும் அவரவர் வசதிக்கேற்றவாறு  நிலைமையைக் கையாளுகிறார்கள். இந்தியாவில் ஒரு பகுதியினர் ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை  சானியா மிர்சா சனிக்கிழமை ஊடகத்தில் , சமையல் வீடியோக்களையும் ஜிம், டான்ஸ் புகைப்படங்களையும் பகிர்வதை நிறுத்துமாறு நெட்டிசன்களை கேட்டுக் கொண்டார்.   

  cooking-images

  இது பற்றி சானியா ,”இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு வேலை சாப்பாட்டிற்கே போராடும் நிலையில் சில சினிமா பிரபலங்களும். பொதுமக்களும் ஊடகங்களில் விதவிதமாக சமைப்பது ,டான்ஸ் ஆடுவது ஜிம்ம்மில் இருப்பது, நண்பர்களுடன் கூத்தடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிடுகின்றனர் .இதை உடனடியாக நிறுத்துங்கள்”என்று கேட்டுக்கொண்டார்.

  மேலும் பாலிவுட் நடிகையும்  ,மாடலுமான தியா மிர்சாவும் இதைப்போல ஒரு கருத்தை சானியாவுக்கு ஆதரவாக வெளியிட்டார்.