ஊரடங்கை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை – மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

  0
  1
  curfew violators

  ஊரடங்கை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

  டெல்லி: ஊரடங்கை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

  கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் மோடி இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் மக்களில் பலர் ஊரடங்கை முழுவதுமாக கடைபிடிக்காமல் பைக் மற்றும் காரில் சாலைகளில் வலம் வருகிறார்கள். மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான போலி செய்திகளும், வதந்திகளும் அதிகளவில் பரவி வருகின்றன.

  ttn

  இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைதள போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.