ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.38,54,144 அபராதம் வசூல்:காவல்துறை அறிவிப்பு!

  0
  5
  ஊரடங்கை மீறுபவர்கள்

  இதனால் ஊடரங்கை மீறி மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 

  இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. அதில்  சென்னையில் 156பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊடரங்கை மீறி மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 

   

  ttn

  இருப்பினும் 144 தடை உத்தரவை மீறி பலரும் வாகனங்களில் சுற்றிவருகின்றனர். இதனால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர். 

  t

  இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   மேலும் 97 ஆயிரத்து 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.38,54,144 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.