ஊரடங்கை மீறினால் ; ஒரு வருடம் சிறை தண்டனை

  0
  3
  lockdown

  நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை, உங்கள் குடும்பத்தினரையும்  காப்பாற்றுவதற்காக  எடுக்கப்படுகிறது.

  இன்று பரபரப்பான சூழ்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை, உங்கள் குடும்பத்தினரையும்  காப்பாற்றுவதற்காக  எடுக்கப்படுகிறது.  தயவு செய்து அனைவரும் வெளியே வராமல்  வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

  modi

  கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தனிமையாக இருப்பது மிகவும் அவசியம். மக்கள் ஊரடங்கை விட இது மிகக் கடுமையான ஊரடங்காக இருக்கும் என்று மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.

  இதனை தொடர்ந்து மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 படி ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.