ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை!

  0
  1
  Lockdown

  இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

  இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 621பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 6 பேர் பலியாகினர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

  ஊரடங்கு உத்தரவு

  இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல்,  ஸ்மிரிதி இராணி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டுமா? எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுப்பது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் குழு தங்களுடைய பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Image

  இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.