ஊரடங்கு நேரத்தில் பிரிட்ஜுக்குள் புகுந்த நல்லபாம்பு : சென்னையில் பரபரப்பு !

  0
  1
  நல்லபாம்பு

  தற்போது ஊரடங்கு என்பதால் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். 

  சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 
   வேலைசெய்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். 

  ttn

  இந்நிலையில் மணிகண்டன் வீட்டுக்குள் நேற்று 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்தது.  இதைக்கண்டு அலறிய குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அதற்குள் பாம்பு வீட்டில் இருந்த பிரிட்ஜிக்குள் புகுந்தது.

  tt

  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து  பக்கெட்டுக்குள் போட்டு எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.