ஊரடங்கு நீடித்தாலும் 90 நாட்களுக்கு பணியாளர்களை வேலை விட்டு நீக்கமாட்டோம்….. சர்வதேச நிறுவனங்கள் உறுதி

  0
  2
  ஊரடங்கு

  ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடித்தாலும் 90 நாட்களுக்கு பணியாளர்களை வேலை விட்டு நீக்கமாட்டோம் என நம் நாட்டில் வர்த்தம் செய்து வரும் பல சர்வதேச நிறுவனங்கள் உறுதிமொழி அளித்துள்ளன.

  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களின் வர்த்தகம் நின்றதோடு வருவாயும் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரவமாக பரவி வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் பணியாளர்களுக்கு, ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

  பணியாளர்கள்

  இந்நிலையில் கொரோனா வைரஸால் ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் 90 நாட்கள் முதல் இந்த ஆண்டு வரை பணியாளர்களை நீக்கமாட்டோம் என இந்தியாவில் தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் எஸ்.ஏ.பி., மோர்கன் ஸ்டான்லி, சேல்ஸ்போர்ஸ், பேபால், சிட்டிகுருப் உள்பட பல சர்வதேச நிறுவனங்கள் உறுதி மொழி அளித்துள்ளன. நிறுவனங்களின் வாக்குறுதி தொழிலாளர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

  மோர்கன் ஸ்டான்லி

  சில நிறுவனங்கள் தற்போது உள்ள பணியாளர்களை தக்கவைக்கும் நோக்கில் புதிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பதை குறைத்துள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளன. தனிமைப்படுத்தலில் உள்ள பணியாளர்களுக்கு கூடுதல் விடுமுறை மற்றும் இதர சலுகைகளையும் வழங்குகின்றன.