ஊரடங்கு உத்தரவால் வீணாக போன பஸ் பாஸ்…. கலக்கத்தில் சென்னை பயணிகள்!! 

  0
  3
  பஸ் பாஸ்

  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது.

  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும்படியும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  பஸ் பாஸ்

  சென்னையில் வேலை, கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய மாதந்திர பாஸ் அட்டையை வாங்குகின்றனர். ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு குறைவான தொகைக்கு போக்குவரத்து துறையால் பஸ் பாஸ் விநியோகிக்கப்படுகிறது. இந்த பஸ் பாஸை ஒரு மாத காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். அதன்படி  15 ஆம் தேதியிலிருந்து அடுத்த 15 ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். கடந்த 15 ஆம் தேதி எடுத்த பஸ் பாஸை அடுத்த 15 ஆம் தேதிவரை பயன்படுத்தலாம். ஆனால் ஊரடங்கு உத்தரவு முன்னறிவிப்பின்றி அறிவிக்கப்பட்டதால் அனைவரும் கடந்த 15 ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பாகவே பஸ் பாஸை பயணிகள் வாங்கி வைத்தனர். மாறாக கடந்த 22 ஆம் தேதி திடீரென ஓருநாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ் பாஸ் எடுத்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பஸ் பாஸ் எடுத்து 7 நாட்களே உபயோகப்படுத்திய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதே காரணம். ஆயிரம் மற்றும் அதற்கு கீழ் பஸ் பாஸ் வாங்கிய பயணிகள், அதனை ஊரடங்கு உத்தரவு முடிந்து அதாவது 15 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரணம் 15 ஆம் தேதியுடன் பஸ் பாஸ் காலாவதியாகும்.

  பஸ் பாஸ்

  ஆகவே போக்குவரத்துத்துறை பஸ் பாஸ் பயணிகளுக்கு செவி சாய்க்குமா? பயண சலுகை அட்டைகளில் கால நிர்ணயத்தை நீட்டிக்குமா? என்ற அறிவிப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. பல நிறுவனங்களில் ஒன்றாம் தேதி சம்பளம் போடவில்லை என்றும், வேலைக்கு செல்லாததால் சம்பளம் பிடித்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் பஸ் பாஸ் பயணிகள் ஒரு மாத கால பேருந்துக்காக செலவழித்த தொகைக்கு அரசு நஷ்டயீடு கொடுக்குமா? என்பது கேள்விக்குறியே….