ஊரடங்கு அமலில் இருந்தாலும் 24 மணி நேரமும் செயல்படும் சென்னை மண்டல சுங்கத்துறை

  0
  1
  customs

  ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை மண்டல சுங்கத்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

  சென்னை: ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை மண்டல சுங்கத்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

  ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை மண்டல சுங்கத்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனால் துறைமுகம், விமான நிலையம், ஏர் கார்கோ, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கொரியர்கள் முனையம் ஆகிய எல்லா இடங்களிலும் பணிகள் எந்த தடங்களும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

  ttn

  அதுமட்டுமின்றி அவசரகால மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ உதிரிபாகங்கள் ஆகியவற்றை அனுமதிப்பது, வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லும் சிறப்பு விமானத்திற்கான அனுமதி, வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் சிறப்பு விமானங்களுக்கான அனுமதி மற்றும் அவர்களது உடைமைகளையும் தனி வழியில் அனுப்புவது போன்ற பணிகளை சென்னை மண்டல சுங்கத்துறை சிறப்பாக செய்து வருகிறது.