ஊரடங்குக்குப் பிறகு யோகி ஆதித்தயநாத் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி கேள்வி எழுப்பிய ஊடகம் மீது வழக்கு!

  0
  5
  yogi adithyanath

  டெல்லியில் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் நடந்த மற்றும் பல நிகழ்ச்சிகளால் எந்த பாதிப்பும் வரவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக தி வயர் என்ற ஆங்கில இணையதள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 25ம் தேதி அயோத்தியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற மத நிகழ்ச்சி தொடர்பாக கேள்வி எழுப்பிய தி வயர் ஊடகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  டெல்லியில் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் நடந்த மற்றும் பல நிகழ்ச்சிகளால் எந்த பாதிப்பும் வரவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக தி வயர் என்ற ஆங்கில இணையதள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

  ram-navami-78

  அதில், “டெல்லியில் மாநாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ராமநவமிக்காக யாத்திரை நடத்த யோகி ஆதித்யநாத் தயாராகி வந்தார். மார்ச் 24ம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஆனால் அயோத்தியில் ராமர் சிலையை தற்காலிகமாக வேறு இடத்தில் நிறுவும் நிகழ்ச்சியில் ஏராளமான அதிகாரிகளுடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்” என்று குறிப்பிட்டிருந்தது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம் ஃபாசியாபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தி வயர் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தி வயர் ஊடகம் கூறுகையில், “என்ன நடந்ததோ அதையே வெளியிட்டிருந்தோம். உண்மை சம்பவத்தை வெளியிட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல்” என்று கூறியுள்ளது.