ஊரடங்கால் வறுமையில் வாடிய குடும்பம்… மனமுடைந்த நபர் குப்பை லாரியில் விழுந்து தற்கொலை!

  0
  1
  court

  கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பேருந்து, ரயில்கள் அனைத்தும் சேவைகளும் முடங்கியுள்ளன.

  கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பேருந்து, ரயில்கள் அனைத்தும் சேவைகளும் முடங்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

  ttn

  இந்நிலையில் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த பக்ருதீன்(54) என்பவரின் குடும்பம் வறுமையில் வாடியதால் கடன் கேட்பதற்காக தி.நகரில் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் மனமுடைந்த பக்ருதீன், குப்பை லாரி ஒன்றின் மீது விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரின் பாக்கெட்டில் இருந்த கடிதம் ஒன்றை பார்த்துள்ளனர். அதில், வறுமை தாளாமல் தான் தற்கொலை செய்து கொள்வதாக பக்ருதீன் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  \