ஊனம் என்பதில் உடலில் இல்லை…. வானில் பறந்து சாதித்த பெண்!!

  0
  7
  jesika

  அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி, சாதனை படைத்துள்ளார். 

  அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி, சாதனை படைத்துள்ளார். 

  அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. இவர் பிறந்தபோது, பெற்றோரே இவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இருப்பினும் குறை தெரியாத அளவிற்கு ஜெஸ்ஸிகாவை வளர்த்துள்ளனர். சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வளர்ந்த ஜெஸ்ஸிகாவுக்கு விமானி ஆக வேண்டும் என்பதே ஆசை…  அந்த ஆசையில் மேற்படிப்பை முடித்து கடந்த 2008 ஆம் ஆண்டு விமான ஓட்டும் பயிற்சியையும் நிறைவு செய்தார். விமானியாக மட்டுமின்றி கார் ஓட்டுதல், கராத்தே, பேச்சாளர், சமையல் என பல்துறைகளில் ஜொலிக்கிறார் ஜெஸ்ஸிகா.  

  இதுகுறித்து ஜெஸ்ஸிகா கூறுகையில், ‘ என் வாழ்கையை நான் என் விருப்பபடி வாழ்கிறேன்.. பலப்பேருக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.