‘ஊடரங்கு இருக்கும் போது எதுக்கு வெளியே போற’.. வாக்குவாதம் முற்றி அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த கொடூரம்!

  0
  4
  dead

  கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு  வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு  இருந்தும்  வீட்டை விட்டு தம்பி வெளியே சென்றதால் அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  ttn

  மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த துர்கேஷ் என்பவர், புனேவில் வேலை செய்து வந்த நிலையில்  கம்பெனி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மும்பைக்கு வந்துள்ளார். இவர் நேற்று முன் தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அறிந்த அவரது அண்ணன் ராஜேஷ்(28) வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால், துர்கேஷ் அதனை பொருட்படுத்தாமல் வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, துர்கேஷுக்கும் ராஜேஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ராஜேஷ் துர்கேஷை கூர்மையான  ஆயுதத்தால் குத்தியுள்ளார். 

  இதில் படுகாயம் அடைந்த துர்கேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.