உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தீவிரவாதி என்ற வக்கீல் கைது.. தேசவிரோத குற்றச்சாட்டு பதிவு

  0
  3
  முதல்வர் யோகி ஆதித்யநாத்

  உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தீவிரவாதி என டிவிட்டரில் பதிவு செய்த வக்கீலை தேசவிரோத குற்றச்சாட்டின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

  உத்தர பிரதேச மாநில தகவல் துறையின் ஊடக ஆலோசகர் ஷாலப் மணி திரிபாதி. இவர் கடந்த சனிக்கிழமையன்று டிவிட்டரில், அம்மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாக முதல்வர்  யோகி ஆதித்யநாத் பேசி இருந்த வீடியோவை பதிவு செய்து இருந்தார். கான்பூரை சேர்ந்த வக்கீல் அப்துல் ஹன்னன் என்பவர் ஆதித்யநாத்தை பயங்கரவாதி என கூறி திரிபாதியின் பதிவை மறு டிவிட் செய்து இருந்தார்.

  அப்துல் ஹன்னன்

  மேலும் மற்றொரு டிவிட்டர் பதிவில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவர்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்குவதாக அறிவித்தார். அரசியலமைப்பு ஆர்வலர்கள் அனைவரும் தன்னை பின்தொடரும்படியும், தனது ட்விட்டுகளை பகிரும்படி கேட்டுக்கொண்டார். இந்த டிவிட் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தர பிரதேச சட்டப்பேரவை

  இதனையடுத்து, வக்கீல் அப்துல் ஹன்னனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து கல்யாண்பூர் காவல் நிலையை எஸ்.எச்.ஓ. அஜய் கேத் கூறுகையில், அந்த நபருக்கு (அப்துல் ஹன்னன்) எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபிறகு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பட்டார் என தெரிவித்தார். தேசவிரோத சட்டத்தின்கீழ் வக்கீல் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.