உழைப்பாளர்கள் தினத்தன்று விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்?

  0
  1
  விக்ரம் - கடாரம் கொண்டான்

  Nuit Blanche  என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘தூங்கா வனம்’ என ரீமேக் செய்த ராஜேஷ்,  ‘Point blank’ என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘கடாரம் கொண்டான்’ என ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  சென்னை: உழைப்பாளர்கள் தினத்தன்று ( மே 1-ஆம் தேதி) விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளது.

  ffvfb

  கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘தூங்கா வனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவின் அடுத்த படம் ‘கடாரம் கொண்டான்’. இதில் விக்ரம் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்ய, பிரவின் கேஎல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

  sfdvzdf

  Nuit Blanche  என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘தூங்கா வனம்’ என ரீமேக் செய்த ராஜேஷ்,  ‘Point blank’ என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘கடாரம் கொண்டான்’ என ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்தின் டீசர் வெளியாகி விக்ரம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதியிருந்தது. இந்நிலையில் இதன் சிங்கிள் டிராக் வரும் மே 1-ஆம் தேதி வெளியாகும் என ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  கடாரம்

  கமல்ஹாசன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், வருகிற மே 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கும் சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே படத்துக்கும் சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி கொடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்! ரஜினி ரசிகர்களுக்கும் தான்…