உழைப்பாளர்கள் தினத்தன்று IRCTC வழங்கும் புதிய வசதிகள்: ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி?

  0
  2
  ஐஆர்சிடிசி

  மே 01-ஆம் தேதி முதல் இந்த வசதி மாற்றியமைக்கப்படவுள்ளது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வரை Boarding station-ஐ மாற்ற முடியும். 

  டெல்லி: ரயில் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வேஸ் ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. மே 1-ஆம் தேதி முதல் Boarding station-ஐ (பயணத்தை துவங்கும் இடம்) 4 மணி நேரத்துக்கு முன்பு மாற்றிக்கொள்ள முடியும். ரிசர்வேசன் சேர்ட் மற்றும் காலியான இடங்கள் பற்றிய விவரங்களையும் ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம்.

  இதுவரை Boarding station-ஐ மாற்ற, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே மாற்றி விட வேண்டும். ஆனால், மே 01-ஆம் தேதி முதல் இந்த வசதி மாற்றியமைக்கப்படவுள்ளது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வரை Boarding station-ஐ மாற்ற முடியும். 

  rail

  இந்த சேவையை ஆன்லைனில் ஐஆர்சிடிசி வலைதளத்தைப் பயன்படுத்தி ரயில் டிக்கேட்டுகளை புக் செய்தவர்கள் ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாமாம். நேரடியாக ரயில்வே நிலையங்களில் இருந்து வாங்கிய டிக்கெட்டுக்கு, ரயில்வே உதவி எண் 139-இல் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள முடியும். இந்த சேவை தட்கல் புக்கிங் செய்பவர்களுக்கும் உண்டு.

  sadhabti

  இந்த சேவை முதற்கட்டமாக சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் பயன்படுத்திவிட்டு பின்னர் இந்தியா முழுமைக்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. நீங்கள் போர்டிங் ஸ்டேசனை மாற்றலாம், உங்கள் பயணத்துக்கான பணம் திரும்ப தரப்படாது. சென்னையில் ரயில் ஏற வேண்டிய நீங்கள், போர்டிங் ஸ்டேசனை மாற்றி பக்கத்து ஊரில ரயில் ஏறலாம். ஆனால் சென்னையில் இருந்துதான் உங்கள் பயணத்துக்கான பணம் வசூல் செய்யப்பட்டிருக்கும், அதை திரும்ப பெற இயலாது.

  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ஐஆர்சிடிசி வலைதளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்த பின் இத்திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ரிசர்வேசன் சேர்ட் மற்றும் காலியான இடங்கள் பற்றிய விவரங்களையும் இனி ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம்.