உள்ளே போ! ட்விட்டர் ஐடியின் பெயரை மாற்றிய நடிகர் ஜீவா!!

  0
  3
  நடிகர் ஜீவா

  உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

  உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசின் உத்தரவையடுத்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

   

   

  கொரோனாவால் மக்கள் வீடுகளில் தங்கியிருக்கவேண்டும், வெளியில் நடமாடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது ட்விட்டர் ஐடியின் பெயரை உள்ளே போ என மாற்றியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில புள்ளிங்கோக்கள் வீம்புக்காக வீட்டைவிட்டு வெளிவந்து உலாவுகின்றனர். வெளியில் நடமாடுபவர்களை அறிவுறுத்தி வீட்டுக்குள் செல்ல காவல்துறையினர் விடுப்பு இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கவுரவிக்கும் விதமாகவும், இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாகவும் ஜீவா தனது ட்விட்டர் ஐடியை மாற்றியுள்ளார்.