உள்ளாட்சி தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தார் விஜயகாந்த்!

  0
  1
   Vijayakanth appointed in charge of local elections

  vijayakanth

  தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறும் சூழலில் அரசியல் கட்சியினரிடையேயும், தொண்டர்களிடையேயும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்கள். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

  vijayakanth

  தமிழகம் முழுவதுமாக 32 மாவட்டங்களுக்கும் தேமுதிக பொறுப்பாளர்களை தேர்தல் பணிகளை கண்காணித்து செயலாற்றுவதற்காக நியமித்து இன்று அறிவித்தார். சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் (18ந் தேதி)  உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.