உள்ளாட்சி தேர்தலில் நடிகை கெளதமி போட்டியா!?

  0
  3
  Actress Gauthami contests in local elections

  bjp office

  சென்னை பாஜக அலுவலகத்தில் நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் தான் பாஜக வேட்புமனுவை பெறுகிறது என அவர் தெரிவித்தார். தொடர்ந்து எந்த பொறுப்புக்கு தான் தயங்கியதில்லை என நடிகை கவுதமி கருத்து தெரிவித்தார்.

  Actress Gauthami contests in local elections

  தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடைப்பெறவுள்ள நிலையில், இன்று நடிகை கெளதமி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்தார். திடீரென நடிகை கெளதமி பாஜக அலுவலகம் வந்ததையடுத்து அங்கே செய்தியாளர்கள் குவிந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கெளதமி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்து வரும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, தான் எந்த பொறுப்புக்கும் தயங்கியதில்லை என்று நடிகை கெளதமி கருத்து தெரிவித்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எந்தப் பதவியும் இல்லாமல் பாஜவில் எனது அரசியல் பயணம் தொடரும் என்று நடிகை கெளதமி பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.