உள்ளாட்சி தேர்தலால் உதறல்… உளவுத்துறை ரிப்போட்டால் அதிர்ச்சி..!

  20
  உள்ளாட்சி

  உள்ளாட்சி தேர்தலில் பக்காவாக திட்டம் போட்டு பல இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

  உள்ளாட்சி தேர்தலில் பக்காவாக திட்டம் போட்டு பல இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.  அதற்கு என்ன அர்த்தம் என்றால் பதவியை கைப்பற்றும் குதிரைபேரம் இன்னும் முடியவில்லை என்பதுதான். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற கதவை தட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். 

  ஆனால் அதற்கும் மாநில தேர்தல் ஆணையம் சரியான பதிலை கொடுக்க தயாராகி வருகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் இன்னும் முடிந்த மாதிரி எடுத்துக் கொள்ள முடியாது. அது இன்னும் தொடரும் என்கிறார்கள்.

  public

  கடந்த உள்ளாட்சி தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதிகளவு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கொலை, அடிதடி, கொலை முயற்சி போன்ற எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே நடந்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம். 

  அதனால், உள்ளூர் போலீசார் இதை கண்காணிக்க வேண்டும். உயிர் இழப்பை தடுக்க வேண்டும் என்று உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது. அதனால் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவு போயிருக்கிறது.