உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒன்று கூடிய அதிமுக கோஷ்டி… குதூகலத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

  15
  எடப்பாடி பழனிசாமி

  உள்ளாட்சி தேர்தல் வருவதால் இணக்கமாக செயல்பட, இரண்டு தரப்புமே முடிவு செய்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.,வினர் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.

  மதுரை மாவட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வந்தார்கள். இவர் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் பதிலுக்கு அவர் ஒரு நிகழ்ச்சி நடத்துவார். உதயகுமார் நிகழ்ச்சிக்கு அச்சடிக்கிற அழைப்பிதழ் போஸ்டர் விளம்பரங்களில் செல்லூர் ராஜு படம் இருக்கும்.

  edappadi pala

  ஆனால், செல்லூர் ராஜு நிகழ்ச்சி விளம்பரங்களில் உதயகுமார் படம் இருக்காது. ஆனால், சமீபத்தில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, செல்லூர் ராஜு தரப்பில் வெளியான விளம்பரங்களில் உதயகுமார் படம் இருந்தது. உள்ளாட்சி தேர்தல் வருவதால் இணக்கமாக செயல்பட, இரண்டு தரப்புமே முடிவு செய்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.,வினர் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.