உள்ளாட்சித் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை!

  10
  ரஜினி

  உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

  டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

  ttn

  இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

  ttn

  ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ மன்றத்தின் கொடியையோ பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.