உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் அதிர்ச்சி தோல்வி

  0
  2
  வினேஷ் போகட்

  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியுற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியுற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

  கஜஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் பங்கேற்றார். முதல் சுற்றில் ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்ற சுவீடன் நாட்டின் சோபியா மாட்ஸ்சோனை எதிர்கொண்டார். சோபியாவை துவம்சம் செய்த வினேஷ் போகட், 13-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றார். 

  vinesh

  காலிருதியில், 55 கிலோ எடை பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன ஜப்பான் வீராங்கனை மயூ முகைடாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் துவக்கம் முதலே மயூ ஆதிக்கம் செலுத்தி, வினேஷ் போகட்டை எந்தவித புள்ளியும் எடுக்கவிடவில்லை. இறுதியில், போகட் மயூவிடம் எளிதாக சரணடைந்து 0-7 என படுதோல்வியை சந்தித்து ஏமாற்றினார். 

  காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று தந்த வினேஷ் போகட், உலக அளவிலான போட்டிகளில் இதுவரை இந்தியாவிற்காக வெண்கலம் கூட வென்று தந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  vinesh

  மேலும், வினேஷ்  போகட் அடுத்து வரும் போட்டியில் வென்றால் ஒலிம்பிக் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை உறுதி செய்யலாம். 

  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் 53 கிலோ எடைபிரிவில் பங்கேற்ற  சீமா பிஸ்லா துவக்கத்திலேயே தோல்வியைக் கண்டு வெளியேறினார். அடுத்ததாக, 55 கிலோ எடை பிரிவில் லலிதா மற்றும் 72 கிலோ எடை பிரிவில் கோமல் ஆகியோரும் தோல்வியை தோல்வியை தழுவியதால் இந்தியாவிற்கு எந்தவொரு பதக்கமும் கிடைக்கவில்லை