உலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ !

  24
  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

  கமல்ஹாசனுடன் கலகலப்பாகப் பேசிய பிராவோ, அவரது கையொப்பமிட்ட டி-ஷர்ட்டையும் பரிசாக கொடுத்துள்ளார்.

  மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசனுக்கு கடந்த ஜூலை 2016 ஆம் ஆண்டு கூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் அவரது வலது காலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிளேட்டை அகற்றத் தாமதம் ஆனது. அவரது பிறந்தநாள் விழா உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

  ttn

  சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போது தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். இவருக்கு, சமீபத்தில் “குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” தங்கப் பதக்கத்தை பிகைண்ட்உட்ஸ் வழங்கியது. தற்போது தமிழகம் வந்திருக்கும் இவர், சென்னை எம்.ஆர்.சி நகரில், கமல்ஹாசனை சந்தித்தார்.

  ttn

  கமல்ஹாசனுடன் கலகலப்பாகப் பேசிய பிராவோ, அவரது கையொப்பமிட்ட டி-ஷர்ட்டையும் பரிசாக கொடுத்துள்ளார். கமல் ஹாசன் பிராவோவுடன் எடுத்த புகைப்படங்களை மக்கள் நீதி மய்யம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.