உலக நாயகனின் இந்தியன்- 2வுக்கு நேர்ந்த புதிய சிக்கல்!?

  0
  2
  இந்தியன்- 2

  விஸ்வரூபத்தின் பட விவகாரத்தில் என்ன நடந்தது என நம் அனைவருக்கும் தெரியும், அதைத்தொடர்ந்து அரசியல் ஈடுபாடு, மக்கள் நீதி மையம், பிக் பாஸ் என பல்வேறு சிக்கல்களையும், விமர்சங்களையும் சந்தித்த கமலுக்கு இப்போது ஒரு புதிய குடைச்சல் எட்டி பார்த்துள்ளது.

  indian 2

  கமல்-ஷங்கரின் காம்போவில் உருவாகி வரும் படம் இந்தியன்-2.
  இதன் முதல் பார்ட் ,1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சமூக விரோதங்களையும், ஊழலையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட படமாக இருந்ததால் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.அந்தப் படத்தில் வந்த இந்தியன் தாத்தா கேரக்டரை மட்டும் வைத்துக்கொண்டு வேறொரு கதையை உருவாக்கி இப்போது இரண்டாம் பாகமாக  இந்தியன்-2 பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

  kamal

  இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக கமலின் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது, ஆனால் அது உண்மையான போஸ்டர் கிடையாது யாரோ ரசிகர்கள் டிஸைன் செய்து வெளியிட்ட போஸ்டர் என்றுபடகுழு மறுத்திருக்கிறது.

  poster

  இதனை, லைக்கா வெளியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தற்போது வெளியாகியுள்ள இந்தியன் பட போஸ்டர் போலியானது, வெளிவந்த போஸ்டர் படக்குழுவினராலோ, இயக்குனராலோ, வெளியீட்டு நிறுவனத்தாலோ வெளியிடப்படவில்லை’ இவ்வாறு லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.