உலக அளவில் அதி நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது….

  0
  6
  அதி நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள்

  சர்வதேச அளவில் அதி நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என நைட் பிராங் வெல்த் தெரிவித்துள்ளது.

  சர்வதேச அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்கள் (UHNWIs) தொடர்பாக நைட் பிராங் வெல்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் 2019ம் ஆண்டில் உலக அளவில் அதி உயர் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை 5.13 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது சென்ற ஆண்டில் புதிதாக 31 ஆயிரம் அதி உயர் நிகர  சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் உருவாகி உள்ளனர். 

  அதி நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள்

  சென்ற ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில்  மட்டும் 5,986 அதி உயர் நிகர சொத்து கொண்ட தனிநபர்கள் உள்ளனர். 2024ல் இது 10,354ஆக உயர வாய்ப்புள்ளது. மேலும் 2024ம் ஆண்டுக்குள் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரிக்கும். 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 104 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

  அதி நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள்

  அதி உயர் நிகர சொத்து வைத்துள்ள தனிநபர்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளின் தரவரிசை பட்டியல்
           நாடுகள்       தனிநபர்கள் எண்ணிக்கை
  01. அமெரிக்கா         2,40,575
  02. சீனா                         61,587
  03. ஜெர்மனி                23,078
  04. பிரான்ஸ்               18,776
  05. ஜப்பான்                  17,013
  06. இங்கிலாந்து         14,367
  07. இத்தாலி                10,701
  08. கனடா                      9,325
  09. ரஷ்யா                     8,924
  10. சுவிட்சர்லாந்து     8,395
  11. ஸ்பெயின்              6,475
  12. இந்தியா                  5,986