உலகிலேயே மிகக் கொடூரமானவர்கள் இந்துக்கள்… நஞ்சை தூவும் பா.ரஞ்சித்..!

  0
  5
  பா.ரஞ்சித்

  காயத்ரி ரகுராம்- திருமாவளவன் விவகாரம் அடங்குவதற்குள் இயக்குநர் பா.ரஞ்சித் இந்துக்களை மிகக் கேவலமாக சித்தரித்து நீலம் பண்பாட்டு மைய்யம் என்கிற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு நஞ்சை விதைக்கும் பதிவிகளைபகிர்ந்துள்ளார்.

  காயத்ரி ரகுராம்-  திருமாவளவன் விவகாரம் அடங்குவதற்குள் இயக்குநர் பா.ரஞ்சித் இந்துக்களை மிகக் கேவலமாக சித்தரித்து நீலம் பண்பாட்டு மைய்யம் என்கிற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு நஞ்சை விதைக்கும் பதிவிகளை பகிர்ந்துள்ளார். 

  இதுகுறித்து பா.ரஞ்சித், ‘’உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். “இந்துக்கள்” என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது.

  Pa.Ranjith

  மக்களை அரசியல்படுத்தத் தவறியதன் விளைவு இன்று ஒவ்வொரு தளத்திலும் வெளிப்படுகிறது. பெரியாரும், அண்ணலும் இந்து மதத்தின் மீது வைக்காத விமர்சனத்தையா திருமாவளவன் வைத்துவிட்டார்? பெரியார் மண் என்று கூறிக்கொள்கிற இங்கிருந்து எப்படி மத ரீதியான தாக்குதல்கள் அதிகப்படியாக நீள்கின்றன? 

   

  சாதி ஒழிப்பில் பின்தங்கிப் போனது, மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே நினைத்தது, பெரியாரை -அண்ணலை கொண்டு சேர்க்காதது என்பவற்றால் இன்று வலதுசாரித் தன்மை கொண்ட இரண்டு தலைமுறைகள் வளர்ந்திருக்கிறது. இவர்கள்தான் இன்று உண்மையாக இருப்பதை கூறியதற்கு கண்மூடித்தனமான அவதூறுகளை செய்பவர்கள். 

  Ranjith

  அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம்பண்பாட்டுமையம் வன்மையாக கண்டிக்கிறது’’ என நீலம் பண்பாட்டு மையம் சார்பாரக இயக்குநர் பா.ரஞ்சித் கண்டித்துள்ளார்.