உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இன்று திறப்பு

  0
  2
  sardarpatel

  சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்

  ஆமதாபாத்: சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

  நாடு விடுதலையடைந்த போது, பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் படேல். இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலின் நினைவை போற்றும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சிலை அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

  இந்த சிலையி்ல் உள்ள இரு லிஃப்ட்கள் சிலையின் மார்புப் பகுதியில் உள்ள 200 பேர் நிற்கக்கூடிய சிறிய அரங்கு வரை செல்லும். சிலை அருகே சுற்றுலா பயணிகளுக்காக மூன்று நட்சத்திர ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை அடைய குஜராத் அரசு 3.5 கிலோ மீட்டர் நீள சாலை அமைத்துள்ளது.

  உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். அதன் உயரம் 419 அடி. ஆனால், இனிமேல் படேல் சிலை உலகின் மிகப்பெரிய சிலையாக இருக்கும். சீனாவில் உள்ள புத்தர் சிலை 2-ம் இடத்திலும், போதிதர்மர் சிலை 3-ம் இடத்திலும்,  அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை 4-ம் இடத்திலும், ரஷ்யாவில் உள்ள தி மதர்லேண்ட் கால்ஸ் சிலை 5-ம் இடத்திலும், பிரேசிலில் உள்ள மீட்பர் இயேசு சிலை, 6-ம் இடத்திலும் இருக்கும். 

  இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.  ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சிலையை திறந்து வைக்கும் பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் பார்வையாளர் அரங்கத்தை பார்வையிடுவார்.