உலகக்கோப்பை தோல்விக்கு இவர்களும் காரணம்; ஹர்பஜன் சிங் புதிய கண்டுபிடிப்பு !!

  0
  15
  ஹர்பஜன் சிங்

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
  இங்கிலாந்தில் நடந்து முடிந்த 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. 

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

  harbajan singh

  இங்கிலாந்தில் நடந்து முடிந்த 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. 
  இந்திய அணியின் இந்த தோல்விக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களக்கு தெரிந்த காரணத்தை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

  chahal and kuldeep

  இது குறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது; 
  சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் கையாண்ட விதம் எனக்கு சற்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் மேஜிக் பந்து வீசினார். எந்தவொரு ஆடுகளமாக இருந்தாலும் அவரால் பந்தை டர்ன் செய்ய முடியும். குறிப்பாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்த்து சிறப்பாக விளையாடியது கிடையாது. ஆனால் அரையிறுதி போட்டியில் சாஹல் மற்றும் குல்தீப் இருவருமே சிறப்பாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.