உலகக்கோப்பை இந்திய அணிக்கு தான்; சோயிப் அக்தர் உறுதி !!

  0
  2
  சோயிப் அக்தர்

  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணியே வெல்லும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். 
  12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 
  கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

  shoaib akthar

  இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தையும், வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்ள உள்ளது. 
  இந்த தொடர் குறித்து முன்னாள், இந்நாள் விரர்கள் பலர் தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் தெரிவித்து வரும் நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், உலகக்கோப்பையை இந்திய அணியே வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

  indian team

  இது குறித்து பேசிய அவர், இந்த உலகக்கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று நம்புகிறேன். பந்துவீச்சு, பேட்டிங் பீல்டிங் என அனைத்திலும் மாஸ் காட்டி வரும் இந்திய அணியே இந்த சாம்பியன் பட்டத்திற்கு தகுதியானது” என்றார்.