உலகக்கோப்பை, ஆஸ்கர் வாங்குன நமக்கு கண்ணுக்கு தெரியாத கொரோனா ஒரு சவால்- ஹர்பஜன்!

  0
  1
  ஹர்பஜன் சிங்

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது

   

  இதற்கிடையில் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் விஜய் ஸ்டைலில் மாஸ்டர் படம் பாடலுடன் அழகாக பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், இளைஞர்களுக்கு புரியும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சிறப்பான முறையில் அறிவுறுத்தியுள்ளார்.

  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், “Let me tweet a குட்டிstory,Pay attention listen2 
  @PMOIndia தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத்தெரியாத #Corona ஒரு சவால்.இதை #21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக” என தெரிவித்துள்ளார்.