உலககோப்பை அணியில் 14 வயது ஷாஹ்சாத் இடம்பிடித்தார்.

  11
   முகமத் ஷாஹ்சாத்

  19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் துவங்கவிருக்கிறது. வரும்  2020 ஜனவரி 17 ம் தேதி துவங்கி ஃபிப்ரவரி 9-ம் தேதிவரை போட்டிகள் நடக்க இருக்கின்றன. மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றன. அவை நான்கு அணிகள் கொண்ட நான்கு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் மோதுவர்.

  mohammed

  அதில் முதல் இடம் பிடிக்கும் முதல் இரண்டு அணிகள் லீக் ஆட்டத்துக்கு போகும் விதமாத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் இடம் பெரும் பாக்கிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த.15 பேர்கொண்ட அணியில் மேற்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் ஷாஹ்சாத் என்கிற 14 வய்து இளம் வீரரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

  ஆல் ரவுண்டரான ஷாஹ்சாத் சமீபத்தில் நடந்த 16 வயதுக்கு உட்படோருக்கான அணியில் கலந்து கொண்டார்.ஆல் ரவுண்டரான ஷாஹ்சாத் இந்தத் தொடரில் இரண்டு முறை 175 ரன்  எடுத்ததுடன் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்தமுறை பாகிஸ்தான் , டீமில்நான்கு  ஆல் ரவுண்டர்களை களமிறக்க திட்டமிடுவதாக கருதப் படுகிறது. இன்னொரு அப்துல் ரசாக்கை தேடுகிறது என்பது உண்மைதான் போல.