உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! அசுரனை வாழ்த்தும் பா.ரஞ்சித்!! 

  0
  5
  Pa Ranjith

  வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது

  வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின் கதையம்சமும், வசனங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டியுள்ளார். 

  tweet

  இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா. ரஞ்சித், “ தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர்  @VetriMaaran தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும்  @dhanushkraja நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி  @theVcreations மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!” என்று பதிவிட்டுள்ளார்.