“உயிர் போனால் வராது; ஊரடங்கை நீட்டியுங்கள்”: மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கோரிக்கை!

  0
  4
  பிரதமர் மோடி- சந்திரசேகர் ராவ்

  இருப்பினும் அதிலிருந்து மீண்டு விடலாம் ஆனால் உயிர்கள் போனால் மீட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  அதேபோல் இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  ttt

  இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் நம்மால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. இதற்கு ஊரடங்கு மட்டுமே தீர்வாக இருக்கும். இதனால் நம் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் அதிலிருந்து மீண்டு விடலாம் ஆனால் உயிர்கள் போனால் மீட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

  ttn

  முன்னதாக தெலங்கானாவில் ஜூன் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து இன்னும் முடிவாகவில்லை. பரிசீலனையில் உள்ளது என முதல்வர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.