உயிர் எழுத்துக்களில் யோகா கலை | என்னென்ன பலன்களுக்கு எந்த எழுத்து?

  0
  242
  உயிர் எழுத்து

  நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன.  இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே மொழியாக்கி பலனடைந்தவர்கள் தமிழர்கள். 

  நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன.  இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே மொழியாக்கி பலனடைந்தவர்கள் தமிழர்கள். 
  பல நோய்களுக்கு நமது தமிழ் மொழியே மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தையும் நாம்  உச்சரிக்கும் ஒலி, நமது பிணிகளைப் போக்கும் மாத்திரைகள் போன்று செயல்படுகின்றன. 

  yoga

  தியான நிலையில் அமர்ந்து, நமது தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களில் ‘ஆ’ முதல் ‘ஒள’ வரையிலான ஒவ்வொரு எழுத்தையும் நாம் உச்சரிக்கும் பொழுது, அந்த ஒலி, நம் உடலில் எண்ணற்ற அதிசயங்களைச் செய்கிறது. 

  1

  ‘ஆ’ என்கிற உயிரெழுத்தை மனதுக்குள் தொடர்ந்து ஒலிக்கச் செய்தால், சஹஸ்ரரா சக்கரம் நல்ல இயக்கம் பெறும். இந்த சக்கரம், நம் தலையின் உச்சிப் பகுதியில் அமைந்திருக்கிறது. ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை வடிவில், கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் என்று முடியும் படியான உச்சரிப்பில் இந்த சக்கரம் பலம் பெறும்.  ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடும்.

  2

  ‘ஈ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், ஆஜனா சக்கரம் நன்கு இயக்கம் பெறும். இந்த சக்கரம் நமது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. அதனால் இதை, நெற்றிக் கண் சக்ரா என்றும் சொல்வார்கள். இந்த சக்கரம் கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை வடிவில் அமைந்திருக்கும். கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை கைவரும்.

  3

  ‘ஊ’ என்கிற உயிரெழுத்தை மனதினுள் ஒலிக்கச் செய்தால், விசுத்தா (அ) விசுத்தி சக்கரம் இயங்க ஆரம்பிக்கும்.  இந்த சக்கரம் நமது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பேச்சுத் திறன், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.

  4

  ‘ஏ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், அனாகதச் சக்கரம் இயக்கம் பெற ஆரம்பிக்கும். அனாஹதா சக்ரா நமது நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

  5

  ‘ஐ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால் மணிபுரா சக்கரம் இயக்கம் பெறும். மணிபுரா சக்ரா, நமது உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும். ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

  6

  ‘ஓ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், ஸ்வாதிஷ்டானா சக்ரா இயக்கம் பெறும். ஸ்வாதிஷ்டானா சக்ரா, நமது உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.  இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.

  7

  ‘ஔ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனதுக்குள் ஒலிக்கச் செய்தால் மூலாதார சக்கரா இயங்கத் தொடங்கும். மூலாதார சக்ரா, மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.